புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரூ.3,887 கோடி செலவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 15 இலகுரக போர் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்படட்து.
இதில், விமானப்படைக்கு 10 ஹெலிகாப்டர்களும், ராணுவத்துக்கு 5 ஹெலிகாப்டர்களும் வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த ஹெலிகாப்டரை தயாரிக்கிறது.
சீனாவுடனான எல்லை பிரச்சனை உட்பட பல்வேறு பாதுகாப்பு சவால்களை இந்தியா எதிர்கொண்டு வருவதை கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த திறன்களையும் மேம்படுத்துவதில் முப்படைகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.