மெரினாவில் உள்ள நீச்சல் குளம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருந்தன.
கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. நாளையுடன் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படுகிறது.
இதனையடுத்து மெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம் வருகிற 1-ஆம் தேதி முதல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூரில் உள்ள நீச்சல் குளமும் வருகிற 5ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்காக நீண்ட நாட்களாக மூடிக்கிடந்த 2 நீச்சல் குளங்களையும் சுத்தப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.