ரஷ்ய ஜனாதிபதி புடினை அங்கிள் என கமெண்ட் செய்து தங்கள் நாட்டிற்குள் ரஷ்யா படையெடுக்கலாம் என்பது போன்ற கருத்தை தெரிவித்த கஜகஸ்தானை சேர்ந்த ரேடியோ தொகுப்பாளினி ஒருவர் அதிரடி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் பாதுகாப்பு படைக்கும் இடையே 35 நாட்களாக கடுமையான போர் நடந்து வருகிறது.
முன்னாள் சோவியத் குடியரசான கஜகஸ்தான், ரஷ்யாவுடன் உலகின் இரண்டாவது மிக நீளமான நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. மேலும் ரஷ்யாவுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளைக் கொண்டுள்ளது.
இந்நிலையில் கஜகஸ்தான் நாட்டில் இயங்கிவரும் வானொலி நிலையத்தில் பணிபுரிந்துவந்த லியூபோவ் பனோவா என்னும் பெண் தொகுப்பாளர் பேஸ்புக்கில் நடந்த விவாதம் ஒன்றில் “ஓவராக பேசினால் வோவோ அங்கிளை கூப்பிட வேண்டியிருக்கும்” என கமெண்ட் போட்டிருக்கிறார்.
ரஷ்ய ஜனாதிபதி புடினை தான் பவோனா வோவோ என்று குறிப்பிட்டார் பனோவா.
இந்நிலையில், அடுத்த நாளே அவரை பணி நீக்கம் செய்திருக்கிறது அந்த வானொலி நிலையம். அவருடைய பணி ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து விமர்சிப்பதை கஜகஸ்தான் தொடர்ந்து தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.