சென்னை: வெங்கட்பிரபு இயக்கியுள்ள மன்மத லீலை படத்தை நிபந்தனையுடன் வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ரூ.30 லட்சத்தை 4 வாரங்களில் வங்கியில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி எம்.சுந்தர் அனுமதி வழங்கினார். குருதி ஆட்டம், மன்மத லீலை பட விவகாரங்களை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.