கீவ் மற்றும் Chernihiv நகரங்களில் தாக்குதலை நிறுத்துவோம் என ரஷ்ய அறிவித்திருந்த நிலையில் உண்மை நிலையை உக்ரைன் வெளிப்படுத்தியுள்ளது.
நேற்று துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உக்ரைன்-ரஷ்யா பிரதிநிதிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு, உக்ரைனின் கீவ் மற்றும் Chernihiv நகரங்களில் தாக்குதலை நிறுத்துவோம் என ரஷ்ய தரப்பில் அறிவிக்கப்பட்டது.
உக்ரேனியர்களுக்கு உதவிய ரஷ்ய வீரர்கள்! வெளியான வீடியோ ஆதாரம்
ஆனால், நேற்று இரவு கீவ் புறநகரில் மற்றும் Chernihiv-ல் தொடர்ந்து ரஷ்ய படைகள் குண்டு போட்டு தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், இரு நகரங்களிலிருந்தும் பெரியளவில் ரஷ்ய துருப்புகள் வெளியேறவில்லை என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அறிவிப்பு குறித்து அவநம்பிக்கையை வெளிப்படுத்திய உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள், களத்தில் தாக்குதல்கள் குறைந்ததை கண்டால் மட்டுமே நம்புவோம் என தெரிவித்துள்ளனர்.