ஐக்கி பெர்ரி @ ஐக்யா காமராஜ் ஒரு இந்திய ராப்பர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்.

தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்து ஐக்கி, அங்குள்ள மகரிஷி வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார், பின்னர் பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தனது எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார்.

ஐக்கி’ ஆரம்பத்தில் பிரபல பின்னணி பாடகி NSK ரம்யாவிடம் பாட்டு பயிற்சி பெற்றார்.

பின்னர் KM மியூசிக் கன்சர்வேட்டரியில் சேர்ந்தார், இது 2008 இல் இசை இயக்குனர் A. R. ரஹ்மானால் பிரேத்யகமாக இசைக்காக நிறுவப்பட்ட உயர்கல்வி நிறுவனமாகும்.

ஐக்கி’ ஒரு பாடலாசிரியராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது பாடல் வரிகள் மற்றும் ட்யூன்’ இளம் இசை தயாரிப்பாளர் தேவ் மேஜர் மற்றும் ராப்பர் ஜாக்ஸ் ஈசன் ஆகியோரின் கவனத்தை ஈர்த்தது.

பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்த ஐக்கி, தொடர்ந்து டெமோக்களை பதிவு செய்யத் தொடங்கினார். மேலும் பாடல்கள் எழுதுவது, ராப் மற்றும் இசையமைப்பது எப்படி என்று கற்றுக்கொண்டார்.

இந்த நேரத்தில்தான், இசை தயாரிப்பாளர் தேவ் மேஜர் “ஐக்கி பெர்ரி” என்ற மேடைப் பெயரை உருவாக்கினார். அதன்பிறகு ஐக்கி, நிறைய ராப் பாடல்கள் எழுதி, மியூசிக் வீடியோவிலும் தோன்றினார்.

ஜனவரி 2020-இல் ஐக்கி தனது முதல் ஆல்பத்தை வெளியிட்டார். ’மீ சின்ஸ் 1991’ என பெயரிடப்பட்ட அந்த ஆல்பம்’ பிரேவ், ஜீலஸி, ஹியூமர் பாலிசி, சியஸ்டர் பாலிசி என மொத்தம் ஒன்பது பாடல்களை கொண்டிருந்தது.

அதிலிருந்து கானா, ஹங்காமா, ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், ஜியோசாவன் மற்றும் பிறவற்றில் ஐக்கியின் பாடல்கள் எப்போதும் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன.

ஆனால் பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பிறகுதான் ஐக்கி’ வெளிச்சத்துக்கு வந்தார்.

ஆரம்பத்தில் ஐக்கியை பார்த்த பலரும் ஏதோ வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் போல என நினைத்தனர். ஆனால், அவருக்கு தஞ்சாவூர் என்பது தெரியவந்ததும் பார்வையாளர்கள் அனைவரும் திகைத்து விட்டனர்.

அப்படி ஐக்கி தோற்றத்திலும், நடையிலும் பார்க்க தமிழ்ப்பெண்ணை போல இல்லாமல் பயங்கர மாடர்ன் லுக்கில் இருந்தார்.

இப்போது ஐக்கி பெர்ரி, தனது ஆல்பம் பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“