'ஹலால் உணவும் ஒரு வகையான ஜிஹாத்தான்' – பாஜகவின் சி.டி.ரவி சர்ச்சை கருத்து

ஹலால் உணவு தொடர்பாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் ஹோட்டல்களில் தயார் செய்யப்படும் ஹலால் உணவை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களாக இந்துத்துவா அமைப்பினர் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

இந்த நிலையில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஹலால் என்பது பொருளாதார ஜிஹாத். இஸ்லாமியர்கள் மற்றவர்களுடன் வியாபாரம் செய்வதைத் தடுக்க இந்த ஜிஹாத் பயன்படுத்தப்படுகிறது.

image
ஹலால் இறைச்சி உணவை இந்துக்கள் பயன்படுத்த வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைக்கும் போது, அந்த உணவை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு உள்ளது?. தங்கள் கடவுளுக்கு வழங்கப்படும் ஹலால் உணவு முஸ்லிம்களுக்கு பிடித்ததாக இருக்கலாம். ஆனால் இந்துக்களைப் பொருத்தவரை இது யாரோ ஒருவரின் எஞ்சியதாகவே உள்ளது. முஸ்லிம்களிடம் இருந்து முஸ்லீம் மட்டுமே பொருட்களை வாங்கும் வகையில் இந்த ஹலால் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள், இந்துக்களிடம் இருந்து இறைச்சியை வாங்க மறுக்கும்போது, நாம் மட்டும் ஏன் அவர்களிடம் இருந்து வாங்க வேண்டும்.  முஸ்லிம்கள் ஹலால் இல்லாத இறைச்சியை பயன்படுத்தினால், இந்துக்களும் ஹலால் இறைச்சியை பயன்படுத்துவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

சி.டி.ரவியின் இந்த பேச்சுக்கு கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி, கண்டனம் தெரிவித்துள்ளார். மாற்று மதத்தினரின் நம்பிக்கையைக் கெடுக்கும் வகையிலும் மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் இந்த பேச்சு உள்ளதாகவும் சாடியுள்ளார்.

இதையும் படிக்க: இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வு: தீர்வு கண்ட அசாம் – மேகாலயா எல்லை விவகாரம்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.