இந்திய பங்கு சந்தையின் தந்தையான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதில் பிரபலமானவர். இன்று இந்த பங்கின் விலையானது அதன் 52 வார உச்ச விலை 245.50 ரூபாயினை தொட்டுள்ளது.
ராகேஷ் ஜுன் ஜுன்வாலா போர்ட்போலியோவில் என்றுமே டாடா குழும பங்குகளுக்கு தனி இடம் உண்டு.
கொரோனா பரவல் காலத்தில் முடங்கியிருந்த வணிகமானது தற்போது மீளத் தொடங்கியுள்ள நிலையில், இப்பங்கின் விலையானது நடப்பு ஆண்டில் இதுவரையில் 30% ஏற்றம் கண்டுள்ளது.
3500 பேருக்கு வாழ்வளிக்க போகும் ஆக்சிஸ் வங்கி.. எப்படி தெரியுமா?
ராகேஷ் ஜுன் ஜுன்வாலா வசம்
தற்போது வணிகமானது வலுவாக மீண்டு வந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் டாடா குழுமத்தினை சேர்ந்த இப்பங்கினை டிசம்பர் காலாண்டு நிலவரப்படி, ராகேஷ் ஜுன் ஜுன்வாலா 1.42 கோடி பங்குகளையும், அவரின் மனைவி ரேகா ஜுன் ஜுன்வாலா 1.42 கோடி பங்குகளையும் வைத்திருந்தனர். இந்த தம்பதியினர் மொத்தம் 2.16% பங்கினை தங்கள் வசம் வைத்துள்ளனர்.
கொரோனாவால் பாதிப்பு
இந்திய ஹோட்டல் வணிகமானது கொரோனா பெருந்தொற்று காரணமாக மோசமான பாதிப்பினை கண்டிருந்த நிலையில், கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பெரும் வீழ்ச்சியினை கண்டுள்ளன. குறிப்பாக லாக்டவுன் காரணமாக சுற்றுலா துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மீட்சி ஆரம்பம்
சுற்றுலா துறையானது பாதிக்கப்பட்ட நிலையில் ஹோட்டல்களில் ரூம்கள் புக் செய்யும் விகிதம் சரிந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஹோட்டல்கள் பெரும்பாலும் இழுத்து மூடப்பட்டன. எனினும் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், ரூம்கள் புக் செய்வதும் அதிகரித்துள்ளது. சுற்றுலா துறையானது வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. குறிப்பாக 2023ம் நிதியாண்டில் சர்வதேச சுற்றுலா வளர்ச்சி விகிதமானது மேம்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிப்பு
தற்போது நாட்டில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டத் தொடங்கியுள்ளது. இதனால் தேவையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே மூன்றாவது காலாண்டில் வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ள நிலையில், வரவிருக்கும் காலாண்டிலும் வளர்ச்சி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாங்கலாமா?
ஷேர்கான் நிறுவனம் இப்பங்கினை வாங்கலாம் என கூறியுள்ளது. இதன் இலக்கு விலையானது 18% அதிகரித்து,286 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது மிக வலுவாக மீண்டு வந்து கொண்டுள்ள பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில், இந்த நிறுவனத்தின் லாபமும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த நிதியாண்டில் கொரோனாவின் தாக்கம் என்பது முழுமையாக இல்லாமல் வளர்ச்சி விகிதம் என்பது வலுவாக இருக்கலாம். இது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனினும் கொரோனாவின் அடுத்த அலை குறித்த அச்சமும் இருந்து வருகின்றது. அப்படி மீண்டும் பாதிக்கப்பட்டால் வளர்ச்சியானது சற்று பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று என்ன நிலவரம்?
இந்தியன் ஹோட்டல் கம்பெனி-யின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில், சற்று அதிகரித்து, 241.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 214.25 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 239 ரூபாயாக உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இந்த பங்கின் விலையானது சற்று அதிகரித்து, 241.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 245.45 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 293.05 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 245.45 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 90.94 ரூபாயாக உள்ளது.
Disclaimer: This recommendations made above are those of individual analysts or broking companies, and not for good returns
Rakesh jhunjhunwala portfolio stocks may rally 18% more: should you buy?
Rakesh jhunjhunwala portfolio stocks may rally 18% more: should you buy?/18% லாபம் கொடுக்கலாம்.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்போலியோ பங்கினை வாங்கி போடுங்க..!