2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: நிருபர் ஐடி கார்டு பறிமுதல்

ஸ்ரீநகர்: ரெய்னாவாரி பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் ஒருவனிடம் இருந்து ஊடக நிறுவனத்தின் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. மத்திய காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள ரெய்னாவாரி பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து  ஜம்மு காஷ்மீர் காவல்துறை காஷ்மீர் மண்டல காவல் கண்காணிப்பாளர் விஜய் குமார் கூறுகையில், ‘பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்டையில் ெரய்னாவாரியில் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது இருதரப்புக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான எல்இடியின் உள்ளூர் பயங்கரவாதிகளில் ஒருவன் செய்தி ஊடக நிறுவனத்தின் அடையாள அட்டையை (ஐடி) வைத்திருந்தான்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.