Petrol and Diesel Price: பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.96.76க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 9 நாட்களில் 8 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamilnadu News Update: போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக்கப்பட்டார்.
India News Update: அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வு: மத்திய நிதி அமைச்சர் விளக்கம்
“கச்சா எண்ணெய் வினியோகத்தில் தடங்கல், போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை கடந்த 2 வாரங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதனால் தான் 8 நாட்களாக பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச விலைக்கு ஏற்ப மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார்.
Ukraine War Updates: உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்ய படைகள் திரும்பப் பெறப்படவில்லை; இடமாற்றம்தான் செய்யப்படுகிறது. கீவில் ரஷ்ய படைகள் குறைக்கப்படுவதாக ரஷ்ய அரசு அறிவித்திருப்பது ஏமாற்றும் செயல் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
World News Update: “இஸ்ரேல், அரபு பயங்கரவாத அலையில் சிக்கியுள்ளது. ஒரே வாரத்தில் தொடர்ந்து 3 பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்ய அவசர கூட்டம் கூட்டப்படும்” என்று இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட் தெரிவித்தார்.
IPL Update: மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
வடக்கு மாசிடோனியாவை வீழ்த்தி 2022 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க போர்ச்சுகல் அணி தகுதி பெற்றது.
இதன்மூலம் 5வது முறையாக உலகக் கோப்பையில் நட்சத்திர வீரர் ரொனால்டோ தடம் பதிக்கவுள்ளார்.
உக்ரைனின் கீவ் நகரில் தங்கள் ராணுவ நடவடிக்கையை குறைக்க ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளது. துருக்கியில் உக்ரைன்-ரஷ்யா வெளியுறவு அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த சமரசம் எட்டப்பட்டது.
வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் போன்ற பெரும்பாலான பொறியியல் படிப்புக்கு 12ஆம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் குழு தலைவர்கள் இன்று தேர்வு செய்யப்படவுள்ளனர். மறைமுக தேர்தல் மூலம் மண்டலக் குழு தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுபாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதலில் விவசாயிகளிடம் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய, பட்டியல் எழுத்தர் ராமச்சந்திரன் மற்றும் லோடுமேன் கிருஷ்ணசாமி ஆகிய 2 பேர் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,233 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 31 பேர் உயிரிழந்தனர். தற்போது 14,704 பேர் தொற்று பாதிப்பில் உள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி.
இம்ரான்கானுக்கு 164 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளதால் ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
ஆட்சியை தக்கவைக்க பெரும்பான்மைக்கு 172 எம்.எல்.ஏ.க்கள் தேவை.
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 13ம் தேதி நடக்க உள்ளது கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் ஆளும் இம்ரான்கான் தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்தது. கூட்டணியில் இருந்த MQM கட்சி ஆதரவை விலக்கியது. இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சூரப்பட்டு, வானகரம் சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டண உயர்ந்துள்ளதாக நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் அகதிகளுக்காக 90 டன் நிவாரணப் பொருட்களை, மனிதாபிமான உதவியாக இந்தியா வழங்கியுள்ளது என்று இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்தார்.