புதுச்சேரி: புதுச்சேரியில் வாங்கி ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும்போது கடந்த 5 மாதங்களில் ரூ.40 லட்சம் திருடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும்போது நூதன திருட்டு அம்பலமாகியுள்ளது. ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பிய தனியார் நிறுவன ஊழியர் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.