வாஷிங்டன்-ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதியை, தேசிய சீக்கிய தினமாக கொண்டாடும் மசோதா, அமெரிக்க பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், இந்திய வம்சாவளிகள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். குறிப்பாக, சீக்கிய மக்கள், கடந்த 100 வருடங்களாக அதிக எண்ணிக்கையில் இங்கு குடிபெயர்கின்றனர். இவர்கள் அமெரிக்காவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.இந்நிலையில், சீக்கிய சமூகத்தினரை கவுரவிக்கும் வகையில், ஆண்டு தோறும் ஏப்ரல் 14ம் தேதியை, தேசிய சீக்கிய தினமாக கொண்டாடும் மசோதா, அமெரிக்க பார்லிமென்டின் மக்கள் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை, இந்திய வம்சாவளி எம்.பி., ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் சேர்ந்து தாக்கல் செய்துள்ளனர். இதற்கு, சீக்கிய அமைப்பினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.ஆண்டுதோறும், ஏப்ரல் 14ம் தேதி, சீக்கிய புத்தாண்டு கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்-ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதியை, தேசிய சீக்கிய தினமாக கொண்டாடும் மசோதா, அமெரிக்க பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவில், இந்திய வம்சாவளிகள் ஏராளமானோர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.