ஒசூரில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளைத் தயாரிக்க மாபெரும் தொழிற்சாலையை அமைந்துள்ள டாடா குழுமம், லாக்டவுன் காலத்தில் ஆட்டோமொபைல் முதல் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியைப் பாதித்த சிப் தட்டுப்பாட்டின் மூலம் புதிய வர்த்தகத்தை உருவாக்கியது.
ஆம், டாடா குழுமம் நவம்பர் மாதத்தில் OSAT பிரிவில் சுமார் 300 மில்லியன் டாலர் முதலீட்டில் மிகப்பெரிய செமிகண்டக்டர் அசம்பிளி தொழிற்சாலையை அமைப்பதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து தான் வேதாந்தா மற்றும் மதர்சன் சுமி ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் இறங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
தற்போது டாடா குழுமம் அடுத்தகட்டத்திற்குச் சென்றுள்ளது.
டாடா குழுமம்
டாடா குழுமம் தனது செமிகண்டக்டர் வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக இத்துறையில் இருக்கும் முன்னணி நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு செய்தது. இதன் படி டாடா குழுமம் சமீபத்தில் கைப்பற்றிய தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுனவனத்தின் வாயிலாகச் செமிகண்டக்டர் பிரிவில் இருக்கும் சாங்க்யா லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
தேஜஸ் நெட்வொர்க்ஸ்
சாங்க்யா லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 64.40 சதவீத பங்ககளைச் சுமார் 283.94 கோடி ரூபாய்க்கு டாடா குழுமத்தின் தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் மூலம் தேஜஸ் நெட்வொர்க்ஸ் கைப்பற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பங்கு கைப்பற்றல் அடுத்த 90 நாட்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 சதவீத பங்குகள்
இதைத் தொடர்ந்து தேவையான ஒப்புதல்கள் பெற்ற பின்னர்ச் சாங்க்யா லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மீதமுள்ள 35.60 சதவீத பங்குகளை 2வது சுற்றுக் கைப்பற்றலில் டாடா குழுமம் வாங்க முடிவு செய்துள்ளது. 100 சதவீத பங்குகளைக் கைப்பற்றிய பின்பு நிர்வாக இணைப்ப செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
சாங்க்யா லேப்ஸ்
சாங்க்யா 2007ஆம் ஆண்டுச் செமிகண்டக்டர் துறையில் உலகளாவிய அனுபவம் கொண்ட நபர்கள் இணைந்து உருவாக்கினர். இந்நிறுவனம் செல்லுலார் வையர்லெஸ், பிராட்காஸ்ட் ரேடியோ, செயற்கைக்கோள் கம்யூனிகேஷன்ஸ் போன்ற பல துறையில் பல சிஸ்டம் மற்றும் செமிகண்டக்டர் பொருட்களைத் தயாரித்து இந்தியா மற்றும் வெளிநாட்டில் வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா
இதன் மூலம் டாடா குழுமம் இந்தியாவில் செமிகண்டக்டர் துறையில் தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் தீவிரமாக இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் டாடா தனது OSAT ஆலையைத் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் அமைக்கத் திட்டமிட்டு வருகிறது.
Tata group’s Tejas networks acquires 64.40 percent shares in Saankhya Lab for semiconductor business
Tata group’s Tejas networks acquires 64.40 Saankhya Lab Stake for semiconductor business ஆட்டத்தை ஆரம்பித்த டாடா.. இனி இந்தியாவுக்கு யோகம் தான்..!