புதுடெல்லி: ‘பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராதம் செலுத்த வேண்டும்’ என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகின்றது. இது தொடர்பாக ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடைசி தேதி முடிந்த பின்னர் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும். அடுத்த 3 மாதங்கள் அல்லது ஜூன் 30ம் தேதி வரை ஆதாரை இணைப்பவர்களுக்கு மட்டுமே ரூ.500 அபராத கட்டணமாக வசூலிக்கப்படும். அதன் பின்னர் முயற்சிப்பவர்கள் ரூ.1000 செலுத்த வேண்டும். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களது பான் எண் மார்ச் 31ம் தேதி முதல் முடக்கப்படும். அபராதத்தொகையை செலுத்தினால் மட்டுமே அதனை மீண்டும் பயன்படுத்த முடியும்’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.