சொத்து மற்றும் கேளிக்கை வரி செலுத்தாத பிரபல திரையரங்குக்கு சீல் வைத்து ஜப்தி செய்தது சென்னை மாநகராட்சி.
2021 – 2022ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என்றும் கட்ட தவறியவர்கள் வட்டி விதிக்கப்படும் என ஏற்கனவே சென்னை மாநகராட்சி எச்சரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பிரபல திரையரங்கான எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கு பல வருடங்களாக சொத்து வரியையும் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்ததாகவும் சென்னை மாநகராட்சியில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாத காரணத்தினால், திரையரங்குக்கு சீல் வைத்து ஜப்தி செய்து இருக்கிறது பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம்.
அதன்படி 51 லட்சத்து 22 ஆயிரத்து 252 ரூபாய் சொத்து வரியும், 14 லட்சம் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்ததால் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 ன் படி ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் செலுத்த வேண்டிய மொத்த தொகையையும் காசோலையாக வழங்கியதால் ஏஆர்ஓ தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் சீலை அகற்றினர். இதனையடுத்து திரையரங்கம் செயல்பாட்டிற்கு வந்தது.
இதையும் படிக்க: தமிழக வளர்ச்சி மாடலை விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவி – என்ன பேசினார்?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM