ஒரு பீப்பாய் 35 டாலர் என்கிற மிகக் குறைந்த விலையில் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யா மீது மேலை நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து ஆண்டுக்கு ஒன்றரைக் கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வழங்குவது குறித்து இருநாட்டு அரசுகள் நிலையிலான பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
பால்டிக் கடல் வழிக்குப் பதில் விளாடிவாஸ்டாக்கில் இருந்து இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளுக்கு எண்ணெய் கொண்டு வருவது குறித்தும் பேச்சு நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.