உக்ரைன் – ரஷ்யாவின் பதற்றமான நிலைக்கு மத்தியில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை உள்பட , பல தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக ரஷ்யாவின் முக்கிய வணிகமாக இருந்து வரும் எண்ணெய் வணிகத்திலேயே பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
இதற்கிடையில் ரஷ்யாவுக்கு நட்பு நாடாக இருந்து வரும் இந்தியாவுக்கு, மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக கூறியது.
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..!
இந்தியாவோ தனது பயன்பாட்டில் பெரும் பகுதியை இறக்குமதி செய்தே பயன்படுத்தி வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உச்சம் தொட்டு வரும் நிலையில், மலிவாக கிடைக்கிறது எனில் வேண்டாம் என்றா கூற முடியும். இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டது.
அமெரிக்கா எச்சரிக்கை
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பே ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் அதிகளவில் வாங்க திட்டமிட்டு வரும் நிலையில், இந்த புதிய அதிகரிப்பானது கிரேட் ரிஸ்க் (Great Risk) என்ற அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எச்சரிக்கையா?
ரஷ்யாவுக்கு எதிரான தற்போதைய தடைகள்,மற்ற நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை தடுக்கவில்லை என்றாலும், மற்ற நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்வதை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம் என்ற எச்சரிக்கை ஓலியாகவும் பார்க்கப்படுகின்றது.
ரஷ்ய அமைச்சர் இந்தியா வருகை
அமெரிக்காவின் இந்த கருத்து, ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், டெல்லி வரவுள்ள நிலையில் வந்துள்ளது. உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளராக இருந்து வரும் ரஷ்யா, உக்ரைன் மீதான போருக்கு பிறகு தொடர்ந்து பல தடைகளை எதிர்கொண்டு வருகின்றது. இதற்கிடையில் இந்த சமயத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதிகளவிலான எண்ணெயினை வாங்கி வருகின்றன.
இந்தியாவின் இறக்குமதி ஒப்பீடு
குறிப்பாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 2021ம் ஆண்டின் மொத்தத்தில் 16 மில்லியன் பேரல் எண்ணெயினை இறக்குமதி செய்திருந்த நிலையில், பிப்ரவரி 24 முதல் ஒப்பிடும்போது 13 மில்லியன் பேரல் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டினை காட்டிலும் இறக்குமதியினை அதிகரிக்காமல், மலிவு விலையில் எண்ணெய் வாங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை என தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவின் திட்டம் என்ன?
எனினும் இது குறித்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை எனலாம். ரஷ்யாவுடனான வணிகத்தினை ரூபாயில் அல்லது டாலரில் செலுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவும் ரஷ்யாவுக்கு ரூபாயில் செலுத்துவதற்காக வழிமுறையை ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
என்ன செய்யலாம்?
மொத்தத்தில் அமெரிக்காவுக்கு சாதகமாக ரஷ்யாவிடம் குறைந்த எண்ணெய் வாங்குமா? அல்லது வருவது வரட்டும் என விலை குறைவாக கிடைப்பதால் நிறைய எண்ணெய் வாங்குமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே? நீங்க என்ன சொல்றீங்க? ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலாமா? வேண்டாமா?
US alert India against increasing crude oil imports from Russia, it says Great risk
US alert India against increasing crude oil imports from Russia, it says Great risk/இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா.. ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்வது கிரேட் ரிஸ்க்!