புதுடெல்லி:
நாட்டில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அனைத்து மின்சார வாகனங்களின் விலைகளும், பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்தார்.
பாராளுமன்ற வளாகத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவினால், எம்.பி.க்கள் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்த முடியும் என்றும் கட்கரி கூறினார். இறக்குமதி மாற்று, குறைந்த செலவில் அதிக செயல்திறன், மாசு இல்லாத மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவையே அரசாங்கத்தின் கொள்கை என்றும் கட்கரி குறிப்பிட்டார்.
‘பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். நாம் ஏற்கனவே நிலைமையைப் பார்த்திருக்கிறோம். எனவே, இதுதான் ஒரே மாற்று எரிபொருள். அதாவது, கிரீன் ஹைட்ரஜன், மின்சாரம், எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ-எல்என்ஜி மற்றும் பயோ-சிஎன்ஜி. அந்த திசையில் நாம் செயல்படுவோம்’ என்றும் நிதின் கட்கரி கூறினார்.