உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எரிபொருட்கள் விலையானது அதிகரித்தது. எனினும் இது தற்போது சற்றே குறைந்திருந்தாலும், தொடர்ந்து தேவை அதிகரித்து வரும் நிலையில் விலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பல நாடுகளும் கச்சா எண்ணெய், நேச்சுரல் கேஸ் இறக்குமதிக்கு ரஷ்யாவுக்கு தடை விதித்துள்ள நிலையில், ஜெர்மனியின் நேச்சுரல் கேஸ் குறித்து எச்சரித்துள்ளது.
இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த சமயத்தில் அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நேச்சுரல் கேஸினை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை கவனிச்சீங்களா.. ரஷ்யா – உக்ரைன் போர் கொடுத்த சூப்பர் வாய்ப்பு.. அதுவும் 4 துறைகளில்!
விலை எவ்வளவு?
இந்த நிலையில் இது குறித்து நிபுணர்கள் என்ன கூறுகின்றனர்? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? இனி விலை எப்படியிருக்கும் என்று அபான்ஸ் குழுமத்தின் EVP & கேப்பிட்டல் & கமாடிட்டியின் தலைவர் மகேஷ் குமாரிடம் பேசினோம்.
உலகின் மிகப்பெரிய அமெரிக்க பங்கு சந்தை எக்ஸ்சேஞ்சான CMEல் நேச்சுரல் கேஸ் விலையானது ப்யூச்சர் வர்த்தகத்தில் 5524 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது சப்ளை அதிகரிக்கலாம் என்ற் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வர்த்தகமாகி வருகின்றது.
விலை அதிகரிக்கலாம்
ரஷ்யாவுக்கு நட்பற்ற நாடுகள் நேச்சுரல் கேஸ்-க்கு கட்டணமாக ரூபிள்களில் செலுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் கோரிக்கையை ஜி7 நாடுகள் நிராகரித்துள்ளன. இது மேற்கொண்டு கேஸ் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிப்பு
தொடர்ந்து கேஸ் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் உள்நாட்டு தேவையும் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் மின்சார உற்பத்தியும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக நேச்சுரல் கேஸ் தேவையானது இன்னும் அதிகரிக்கலாம். இது அதன் விலை ஏற்றம் காண வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலையை சற்று கட்டுப்படுத்தலாம்
அதேசமயம் அதிகரித்து வரும் உற்பத்தியின் காரணமாக அதிக விலையேற்றம் தடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளூம்பெர்க் தரவின் படி, அமெரிக்க ஏற்றுமதி டெர்மினல்களுக்கு எரிவாயும் கடந்த ஆண்டினை காட்டிலும் 2.5% அதிகரித்து 12.05 bcf ஆக அதிகரித்துள்ளது. இதே உள்நாட்டு தேவை 73.8 bcf ஆகவும் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 13% அதிகரித்துள்ளது.
மின்சார உற்பத்திக்கு பயன்படும் Ng
அமெரிக்காவின் மின்சார உற்பத்தியில் பெரிதும் நேச்சுரல் கேஸ் பயன்படுத்தப்படுகிறது. இது மார்ச் 26வுடன் முடிவடைந்த வாரத்தில் மின்சார உற்பத்தியானது 3.8% அதிகரித்து 70,186 GWh ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இன்று வெளியாகவிருக்கும் இயற்கை எரிவாயு இருப்பு பற்றிய தரவானது, விலைக்கு ஒரு புதிய திசையை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் விலையில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம்.
இலக்கு விலை
நேச்சுரல் கேஸ் விலையானது வர்த்தகம் ஆகும்போது முக்கிய சப்போர்ட் ஆக 5376 – 5146 டாலர்களாக இருக்கலாம். இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 5730 – 5854 டாலர்களாகவும் இருக்கலாம்.
positive trend in natural gas is likely to continue
positive trend in natural gas is likely to continue/நேச்சுரல் கேஸ் விலை தொடர்ந்து அதிகரிக்கலாம்.. ஏன் தெரியுமா?