தீவிரமடையும் பொருளாதார நெருக்கடியால், அந்நிய செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் ஏற்றுமதிக்கு அரசாங்கத்தால் பணம் செலுத்த முடியாமல் போனதன் காரணமாக, இலங்கை நீண்ட நேர மின்வெட்டை சந்தித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தவறான நேரத்தில வரி குறைப்பு, கொரோனாவால் சுற்றுலா துறை பாதிப்பு,பலவீனமான அரசு நிதி ஆகியவை காரணமாக, இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதிலிருந்து மீண்டு வர, 22 மில்லியன் வசிக்கும் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) உதவி கோரியுள்ளது. இலங்கை பங்குகள் 7% க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்ததால், பங்குச் சந்தை இரண்டு முறை வர்த்தகத்தை நிறுத்த வழிவகுத்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்நிய செலாவணி கையிருப்பு 70% குறைந்துள்ளது. பிப்ரவரி நிலவரப்படி 2.31 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இதனால் உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் இலங்கைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக் கூறுகையில்,” 37,000 டன் டீசல் ஏற்றுமதிக்கு அரசாங்கத்தால் $52 மில்லியன் செலுத்த முடியாததே இந்த மின்வெட்டுக்கு காரணமாகும்.
எங்களிடம் பணம் செலுத்த அந்நிய செலாவணி இல்லை.அதுதான் உண்மை. அடுத்த இரண்டு நாட்களில் மின்வெட்டு மேலும் அதிகரிக்கலாம் என்றார்.
தற்போது மிகவும் வறட்சியான காலம் என்பதால், நீர்மின் நிலையங்களிலும் குறைந்த அளவிலே நீர் இருப்பு உள்ளதால், அதன் மூலம் நடைபெறும் மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் மின்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது
தற்போதைய நெருக்கடியை சமாளிக்க, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, IMFவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அடுத்த மாதம் வாஷிங்டன் டிசி செல்வதாக கூறப்படுகிறது.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவியை பெற்றால், அது உலகளாவிய கடன் வழங்குநரிடமிருந்து 17வது முறையாக பெறும் நிதி மீட்புப் பேக்கேஜாக இருந்திடும்.
குறைவான மக்கள், குறைவான பியர்ஸ்
இலங்கையின் முக்கிய நகரமான கொழும்பில் உணவகத்தைச் நடத்தி வரும் ஹார்போ குணரத்னே கூறுகையில், “டீசல் பற்றாக்குறையால் தனக்கு சொந்தமான 10 உணவகங்களில் சொந்த ஜெனரேட்டர்கள் இருந்தபோதிலும், மின்வெட்டுகளின் போது அவற்றை இயக்குவது கடினமாக இருந்தது.
என்னிடம் 150 பேர் பணியாற்றுகின்றனர். இதுபோல் ஒரு சூழ்நிலையை பார்த்தே இல்லை. மிகவும் மோசமானது என்றால், இந்த நிலைமை எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பது தெரியவில்லை என்றார்.
அட்வகேட்டா இன்ஸ்டிடியூட் சிந்தனைக் குழுவின் ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ கூறுகையில், மோசமடைந்து வரும் மின்சார நிலைமை ஏற்கனவே போராடி வரும் வர்த்தகம் மேலும் பாதிக்கும். இது, இலங்கையின் வளர்ச்சியை பாதிப்பதோடு மட்டுமின்றி கையிருப்புகளை மேம்படுத்துவதற்கும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும், அத்தியாவசிய இறக்குமதிகளுக்குச் செலுத்துவதற்கும் முக்கியமான ஆதரமான அந்நியச் செலாவணி வருமானத்திற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றார்.
2021 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட 1.8% குறைவாக இருந்தது.முழு ஆண்டு வளர்ச்சியை 3.7% ஆக இருந்ததாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
குணரத்ன தனது கொழும்பு உணவகங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 30% ஆக குறைந்துள்ளதாக தெரிவித்தார். அவர் கூறுகையில், ” மக்கள் வெளியே செல்லும்போது கூட அவர்கள் செலவில் கவனமாக இருக்கிறார்கள். முன்பு இரண்டு பீர் குடித்தவர் இப்போது ஒன்று மட்டுமே குடிக்கிறார் என்றார்.