சென்னை: திரூவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி., பிஎட் உட்பட 7ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளும், எம்எஸ்சி கணிதம், எம்எஸ்சி வேதியியல், எம்எஸ்சி இயற்பியல், எம்ஏ பொருளாதாரம் உட்பட 23 முதுகலை பட்டப் படிப்புகளும், 28 பிஎச்டி படிப்புகளும் உள்ளன.
முந்தைய ஆண்டுகளைப் போலவே வரும் கல்வி ஆண்டிலும் (2022-2023) பொது நுழைவுத்தேர்வு மூலம் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை நடத்தப்பட உள் ளது. இதற்கான நுழைவுத்தேர்வை என்டிஏ நடத்தும்.
இத்தேர்வு ஐஐடி, ஐஐஎம், என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வை போன்று நடத்தப்படும். அப்ஜெக்டிவ் முறையில் தமிழ் உட்பட 13பிராந்திய மொழிகளில் கணினிவழியில் நுழைவுத்தேர்வு நடைபெறும்.வெவ்வேறு படிப்புகளுக்கான அடிப்படை கல்வித்தகுதி விவரம்www.cutn.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு விவரங்களை என்டிஏ இணையதளத்தில் (www.nta.ac.in) அறிந்து கொள்ளலாம்என்று தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.