பாலஸ்தீன அகதிகள் முகாமில் சோதனையிட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய இருவர் சுட்டு கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலில் கடந்த வாரம் மட்டும் 3 வெவ்வேறு இடங்களில் போராளி குழுவினர் நிகழ்த்திய துப்பாக்கி சூடு சம்பவங்களில் அப்பாவி பொதுமக்கள் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்களில் தொடர்புடையவர்களைத் தேடி பாலஸ்தீன கிராமங்களில் இஸ்ரேல் வீரர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பாலஸ்தீன இளைஞர்கள் இருவர் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜெனின் நகர வீதிகள் வழியாக நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.