உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க இருப்பதை கணிக்கத் தவறியதாக கூறி, பிரெஞ்சு ராணுவ உளவுத்துறையின் தலைவர் தமது பதவியை இழந்துள்ளார்.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் திகதி ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்தது. தற்போது 5 வாரங்கள் கடந்தும் ரஷ்ய போர் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், பொறுப்புக்கு வந்து 7 மாதங்களில், உக்ரைன் விவகாரம் தொடர்பில் தமது பதவியை இழந்துள்ளார் பிரெஞ்சு ராணுவ உளவுத்துறையின் தலைவர் Eric Vidaud.
அவரது பதவியை பறிக்க காரணமாக கூறப்படுவது, ரஷ்ய படையெடுப்பு தொடர்பில் அரசுக்கு போதுமான விளக்கங்கள் அளிக்கத் தவறியது, படையெடுப்பு தொடர்பில் போதிய தேர்ச்சி இல்லாமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரஷ்யாவின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்துவந்த அமெரிக்கா, படையெடுப்பு தொடர்பில் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதேவேளை, உக்ரைன் மீதான படையெடுப்புக்கு வாய்ப்பில்லை என்றே பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பிரஞ்சு உளவுத்துறை அமெரிக்க அல்லது பிரித்தானியா அளவுக்கு கண்டிப்பாக செயல்பட முடியாது என்றே தளபதி Thierry Burkhard குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக தளபதி Eric Vidaud இராணுவ உளவுத்துறைக்கு பொறுப்பேற்ற சில வாரங்களுக்குப் பிறகு,
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உடனான பாதுகாப்பு உடன்படிக்கைக்கு ஆதரவாக பிரான்சுடனான பல பில்லியன் டொலர் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா ரத்து செய்தபோது அவரது சேவை விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.