சொத்துவரி வரி மற்றும் கேளிக்கை வரி செலுத்த தவறியதால், சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
2021 – 22 நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என்றும், செலுத்த தவறியவர்களுக்கு வட்டி விதிக்கப்படும் என ஏற்கனவே சென்னை மாநகராட்சி எச்சரித்திருந்தது.
இந்நிலையில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 51 லட்சத்து 22 ஆயிரத்து 252 ரூபாய் சொத்து வரியும், 14 லட்சம் ரூபாய் கேளிக்கை வரியும் ஆல்பர்ட் திரையரங்க நிர்வாகம் செலுத்தாமல் இருந்ததால் திரையரங்குக்கு சீல் வைக்கப்பட்டது.