அமராவதி: ஆந்திர மாநிலத்தில் வரும் ஏப்ரல் 4-ம் தேதி புதிதாக 13 மாவட்டங்கள் அதிகாரபூர்வமாக உதயமாக உள்ளது.
ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் புதிய மாவட்டங்கள் குறித்த ஆலோ சனை கூட்டம் நேற்று அமராவதியில் நடந்தது. இதில் மக்கள் பிரதி நிதிகள் மக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் மீது விவாதம் நடை பெற்றது. மொத்தம் 16,600 மனுக்கள் வந்ததால், அவை குறித்து நீண்ட விவாதம் நேற்று நடைபெற்றது. நிறை, குறைகளை அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் முதல்வரி டம் விவரித்தனர். பெயர் மாற்றம், தொகுதி ரீதியான மாற்றங் கள் போன்றவை குறித்து விவாதித் தனர்.
வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதிதற்போதுள்ள 13 மாவட்டங்கள் 26 மாவட்டங்களாக அதிகாரப்பூர்வமாக பிரிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் காலை 9.05 முதல் 9.45 வரை புதிய மாவட்டங்கள் குறித்த இறுதி அறிக்கை வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக மாவட்டங்கள் உதயமாக உள்ளன.
ஏப்ரல் 6-ம் தேதி முதல் வார்டு, கிராம தன்னார்வலர்களின் சேவை தொடங்கப்படுகிறது. பின்னர் 8-ம் தேதி ’வசதி தீவனா’ எனும் புதிய திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல் படுத்தப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், ‘‘பொருளாதார ரீதியாக ஒவ்வொரு மாவட்டமும் முன்னேறும் வகையில் வரை படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டி டங்களுக்கு இடம் தேர்வு விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களும் அமைக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
பாலாஜி மாவட்டம்
புதிய மாவட்டங்கள் வரும் 4-ம் தேதி உதயமாகும் வேளையில், சித்தூர் மாவட்டத்திலிருந்து பாலாஜி மாவட்டமும் புதிதாக உதயமாக உள்ளது. திருப்பதி இதற்கு தலைமை இடமாக செயல் படும். இதற்காக திருச்சானூரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ. 75 கோடியில் கட்டிய பத்மாவதி நிலையம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்பட உள் ளது.
இதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநலன் வழக்கிலும் நேற்று அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. பத்மாவதி விடுதி திருப்பதி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்படலாமென உச்ச நீதி மன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.