விளாடிமிர் புடின் கடுமையான ஆத்திரத்தில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
ரஷ்யா எளிதாக உக்ரைனை கைப்பற்றிவிடும் என்ற பேச்சுக்கள் பொய்யானது. ஏனெனில் உக்ரைன் கடுமையான பதில் தாக்குதலை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் போர் உத்திகள் தொடர்பில் புடின் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், போர் உத்தியில் புடினை ரஷ்யப் படைகள் தவறாக வழிநடத்தியதன் காரணமாக அவர் கடுமையான கோபத்தில் இருக்கிறார்.
புடின் தனது ராணுவ ஜெனரல்கள் மீதான நம்பிக்கையை இழந்துள்ளார். போர்க்களத் தகவல்களில் உண்மைக்கு மாறான நிலவரங்களை தன்னிடம் அவர்கள் தெரிவித்ததாக புடின் ஆத்திரத்தில் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.