
கர்ப்ப காலத்திலும் விளம்பரப் பதிவுகளில் காஜல் அகர்வால் பிஸி
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். 2020ம் ஆண்டு கவுதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் இப்போது கூட அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்.
இன்ஸ்டாவில் அதிக பாலோயர்களை வைத்திருப்பவர்களில் காஜலும் ஒருவர். அவரை 21 மில்லியன் பேர் தொடர்கிறார்கள். இதனால் தனது பேஜில் அடிக்கடி விளம்பரப் பதிவிடுபவர்களில் காஜல் அகர்வாலும் ஒருவர்.
நேற்றைய செய்தி ஒன்றில்தான் நடிகை சமந்தா அவரது விளம்பரப்பதிவுகளுக்கான கட்டணத்தை உயர்த்திவிட்டதாகச் சொன்னோம். தற்போது நடிப்பதிலிருந்து ஒதுங்கி, கர்ப்பத்தின் காரணமாக ஓய்வில் இருக்கும் காஜல் இப்போது கூட விளம்பரப் பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார். ஒரு பதிவிற்காக பல லட்சங்கள் சம்பளமாக வரும் போது யார் தான் இதை நிறுவத்துவார்கள்.
ஏற்கெனவே மதுபான விளம்பரங்களைப் பதிவு செய்த காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதால் கர்ப்ப காலம் சம்பந்தமான விளம்பரங்களைப் பதிவிட்டு வருமானத்தைத் தேடிக் கொள்கிறார்.