
'காத்து வாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு நிறைவு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. அனிருத் இசையமைத்து வருகிறார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் லலித் குமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களால் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், பிரபு, ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் படக்குழுவினர் படப்பிடிப்பு நிறைவை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இப்படம் திரையரங்குகளில் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது.