கார்கீவ் புறநகரின் முக்கிய சாலையை ரஷ்யப் படைகளிடம் இருந்து மீட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
2-வது பெரிய நகரமான கார்கீவின் புறநகரில் Chuguiv என்ற பகுதியை இணைக்கும் முக்கிய சாலையான மாலா ரோகன் கிராமத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றி இருந்ததாகவும், 3 நாட்களாக நடந்த கடும் போருக்கு பின் ரஷ்யப் படைகளை பின்வாங்கச் செய்து அப்பகுதியை கைப்பற்றியதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
போரால் சோர்வடைந்த ரஷ்ய வீரர்கள் 40 பேரை பிடித்துள்ளதாகவும், சில ரஷ்ய வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்ய வீரர்களின் தாக்குதலால் உருக்குலைந்து கிடக்கும் நகரில் சீரமைப்பு பணியை முன்னெடுத்துள்ளதாகவும், நிர்வாக பணிகளுக்கான வேலைகள் நடைபெறுவதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.