புதுடெல்லி:
கொரோனா நிவாரணம் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த 20.03.2022ஆம் தேதிக்கு முன் நிகழ்ந்த கொரோனா இறப்புகளுக்கு, 60 நாட்களுக்குள்ளும், 20.03.2022 முதல் நிகழ்ந்த கொரோனா இறப்புகளுக்கு, இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள்ளும் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் மனுக்களை சமர்ப்பிக்க இயலாதவர்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்யலாம் என்றும், மனுக்களை, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இறப்பு நிவாரணம் கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.