கேரளாவின் காசர்கோட்டில் கர்ப்பிணி ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் விநோதமான சத்தம் கேட்டுள்ளது. உறங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் சத்தம் கேட்டு எழுந்தனர். அவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, கருவுற்ற ஆடு கூண்டுக்கு வெளியே ரத்தம் கசிய விழுந்து கிடப்பதைக் கண்டனர். ஒரு நபர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடுவதையும் அவர்கள் கண்டனர். அவ்வாறு ஓடியவர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அதே ஹோட்டலில் வேலை செய்து வந்த செந்தில்.
ஊழியர்கள் ஹோட்டல் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்க, அவர் காவல் துறைக்கு தகவல் அளித்தார். காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதிக ரத்தம் வெளியேறியதால் அந்த ஆடு உயிரிழக்க கால்நடை மருத்துவர் ஒருவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அவர் வந்து பரிசோதனை செய்துவிட்டு கர்ப்பிணியான அந்த ஆடு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஊர் முழுக்க தேடி தப்பியொடிய நபரை போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட செந்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி ஆவார்.
இந்த சம்பவத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் விலங்குகளை துன்புறுத்துவது தொடர்பான பிரிவு, இயற்கைக்கு மாறான பாலுறவு மேற்கொண்ட குற்றம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. “பிரேத பரிசோதனை செய்த அரசு கால்நடை மருத்துவரின் முதற்கட்ட அறிக்கையில், ஆடு இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. விரிவான அறிக்கையில் தான் இறந்ததற்கான முழுமையான காரணம் தெரியவரும்,” என்று காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM