கொரோனா தொற்றின் நன்காவது அலையை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிட்டிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கொரோனா தொற்று பரவல் இன்னும் முழுமையாக குறையவில்லை என்றும், பல்வேறு நாடுகளில் நோய் தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனால் பொதுமக்கள் கவனக்குறைவாக இல்லாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும், தடுப்பூசி செலுத்தி கொள்ள முன் வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், நான்காவது அலை வரக்கூடாது என்று இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்தார்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், கொரோனா 4-வது அலை வருவதை தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை பொது மக்கள் உரிய முறையில் செய்து கொள்ள வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.