கோத்தகிரியில் வனத்துறையினர் ரோந்து மேற்கொள்ளும்போது இரண்டு சிறுத்தைகள் இறந்து கிடந்துள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோத்தகிரி அடுத்துள்ள கீழ் கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட தேனாடு பிரிவு மூன்றாவது காப்புகாட்டிற்குள் வனத்துறையினர் ரோந்து மேற்கொள்ளும்போது சுமார் 7 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுத்தையும், அடையாளம் காணமுடியாத மற்றொரு சிறுத்தையும் இறந்து கிடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் போஸ்லே, உதவி வன பாதுகாவலர் சரவணக்குமார், வனச்சரகர் சிவா தலைமையிலான வனத்துறையினர் மற்றும் முதுமலை வன கால்நடை மருத்துவர் ராஜேஷ், ராஜன் மற்றும் வனவிலங்கு சமூக அமைப்புகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆய்விற்காக முக்கிய உறுப்புகள் சேகரிப்பட்டது.
பின்னர் இறந்த சிறுத்தைகளின் உடல்கள் அந்த இடத்திலேயே தீமூட்டி எரியூட்டப்பட்டது. எந்த காரணத்தால் சிறுத்தைகள் இறந்திருக்கக்கூடும் என பிரேத பரிசோதனை ஆய்வின் முடிவில் தெரியவரும் வனத்துறையினர் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM