கோவை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மான்குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சூலூர் அடுத்த பீடம்பள்ளி கிராமத்தில் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான திறந்தவெளி விவசாய கிணற்றுக்குள் நேற்று 2 வயதே உடைய காட்டு மான்குட்டி விழுந்திருந்ததை கண்ட அப்பகுதியினர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற வனத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கி மானை வலை வைத்து பத்திரமாக மீட்டு, அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மானுக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் ஏற்படாததையும், மான் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி செய்த அதிகாரிகள் பின்னர் அதனை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள எட்டிமடை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.
சம்பவ இடத்திற்கு அருகே வனப்பகுதி எதுவும் இல்லாததல் அந்த மான் நீண்ட தூரத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து பயணித்து தண்ணீர் தேடி வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.