டெல்லியின் மூன்று மாநகராட்சிகளை ஒருங்கிணைக்கும் மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பாக மக்களவையில் பேசுகையில், “அரசியல் கட்சிகள் அனைத்தும், தங்கள் கொள்கை அடிப்படையில் வெற்றி பெற வேண்டும். நாங்கள் தேர்தலில் எங்களுடைய திட்டங்கள், சித்தாந்தம், தலைமைத்துவத்தின் புகழ் மற்றும் அரசாங்கத்தின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எல்லா இடங்களிலும் போராடி வெற்றிபெற விரும்புகிறோம். இதற்குப் பதிலாக , நாங்கள் எதிர்க்கட்சிகள் மீது வன்முறையை ஏவவில்லை. அது எங்கள் கலாசாரம் அல்ல” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “ஜம்மு – காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி தொடர்வதை நாங்கள் விரும்பவில்லை. ஜம்மு-காஷ்மீரில் முதலில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து எல்லை நிர்ணயம் செய்யப்படும், அதன் பிறகு சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும். பின்னர் ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்றார்.