சுவிட்சர்லாந்தில் மீட்பு, விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள பன்முகத்தன்மை கொண்ட நவீன ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
மனிதர்களை போன்று இரு கால்களில் இயங்கக் கூடிய வகையிலும் அதேபோல் சட்டென நான்கு கால்களில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு ஊர்ந்து செல்லும் வகையிலும் ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய வகையில் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
விரைவில் 100 கிலோ வரை எடையை கையாளும் வகையில் ரோபோ மேம்படுத்தப்பட உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.