சென்னை: கண்டெய்னர் லாரி மோதி பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

தாம்பரம் – மதுரவாயல் பைபாசில், இருசக்கர வாகனம் மீது, கண்டெய்னர் லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்குன்றம் அடுத்த மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அக்பர். இவரது மகன் முகமது யாசிம்( 21). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார். இன்று மாலை கல்லூரி முடிந்து, தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில், முகமது யாசிம் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ், மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில், உடலில் பலத்த காயம் ஏற்பட்டு, முகமது யாசிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் முகமது யாசிமின் நண்பர் பலத்த காயமடைந்தார்.
image
விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி சாலை தடுப்பு சுவர் மீது ஏறி, எதிர் திசையில் உள்ள சாலையின் குறுக்கே சென்று நின்றது. இந்த விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்துப்போன முகமது யாசிம் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த முகமது யாசிமின் நண்பரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து காவல்துஐறயினர், தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு சாலையின் எதிர் திசையில் நின்ற கண்டெய்னர் லாரியை அகற்றும் பணியிலும் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.