டில்லி
மருத்துவ இளநிலை பட்டப்படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஜூலை 17 நடைபெற உள்ளது.
இந்தியாவில் மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளனர். பல்வேறு தரப்பினருக்கும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி மாநில சட்டசபையில் ஒரு தீர்மானம் இயற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தீர்மானம் அனுப்பிப் பல மாதங்கள் கழித்த பிறகும் அந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை.
இந்நிலையில் தேசிய தேர்வு முகமை மருத்துவ இளநிலை பட்ட படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இதற்கு மாணவர்கள் நாளை முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.