தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு உள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா வருகின்ற 2-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் நள்ளிரவில் டெல்லி சென்றிருந்தார். அவருக்கு திமுக எம்பிக்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், டெல்லியில் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது நீட், மேகதாது, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் இடம் அளிக்க உள்ளார். மேலும் டெல்லியில் ஏப்ரல் 2ஆம் தேதி புதிதாக திறக்கப்படும் அண்ணா – கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறார்.
இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். அதன் பிறகு ஏப்ரல் 2ஆம் தேதி திமுக அலுவலகத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.