தங்கம் விலை வீழ்ச்சியா.. எவ்வளவு குறைந்திருக்கு.. ஆபரணத் தங்கத்தின் நிலவரம் என்ன?

2022ம் ஆம் காலாண்டர் ஆண்டில் தங்கம் விலையானது இதுவரையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில் தொடர்ந்து, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் தேவையை ஊக்குவித்துள்ளது. இது இன்னும் தொடரலாம் என்ற போக்கே நிலவி வருகின்றது.

எனினும் உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், தற்போது சுமூக தீர்வு ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. ரஷ்ய படைகள் பின் வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் அதிலும் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. ரஷ்ய பின்வாங்குவதாக கூறினாலும், தொடர்ந்து சில இடங்களில் தாக்குதலை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் உக்ரைன் தலை நகரில் இருந்து ரஷ்ய படைகளை வெளியேற்றுவதை பார்த்து ஏமாந்து விட கூடாது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

பான் – ஆதார் எண் இணைக்க மார்ச் 2023 வரை காலக்கெடு நீட்டிப்பு.. ஆனா ஒரு கண்டிஷன்..!

அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்கா எச்சரிக்கை

மேலும் ரஷ்யா மற்ற இடங்களில் மோசமான தாக்குதலை நடத்த கூடும். இது உக்ரைனுக்கு மேற்கொண்டு பிரச்சனையை அதிகரிக்கும். இதன் காரணமாக உக்ரைன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க எச்சரித்துள்ளது. இது மேற்கொண்டு பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு பாதுகாப்பாக அமையக்கூடும். இது தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், இது இது அமெரிக்காவின் ஜிடிபி விகித சரிவு, வேலை வாய்ப்பு விகிதம் சரிவு உள்ளிட்ட பல காரணிகளினால் சரிவினைக் கண்டு வருகின்றது. இதன் காரணமாக இது தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க தூண்டியுள்ளது. ஆக தற்போதைக்கு தங்கம் விலையானது தடுமாற்றத்தில் இருந்தாலும், மீண்டும் உயரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

OPEC கூட்டம்
 

OPEC கூட்டம்

வரவிருக்கும் ஓபெக் கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறித்தான முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இது தொடர்ந்து சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்து வரும் சூழலில், முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் சீனாவின் பல நகரங்களிலும் கொரோனா காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாகவும் கச்சா எண்ணெய் தேவையானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உற்பத்தி அதிகரிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பத்திர சந்தை சரிவு

பத்திர சந்தை சரிவு

அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து இன்றும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. ஆக இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலைக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இன்று சர்வதேச சந்தைகள் பலவும் தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. ஆக இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க தூண்டலாம்.

முக்கிய 3 விஷயங்கள்

முக்கிய 3 விஷயங்கள்

எப்படியிருப்பினும் வர்த்தகர்கள் மூன்று முக்கிய விஷயங்களை கவனத்தில் கொண்டுள்ளனர். ஒன்று ரஷ்யா – உக்ரைன் போர், இரண்டாவது கொரோனா லாகடவுன், இது சர்வதேச அளவில் பணவீக்கத்தினை தூண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

ஃபண்டமெண்டல் காரணிகள் சில தங்கத்திற்கு சாதகமாகவே உள்ளன. இதற்கிடையில் டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.இதுவே நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் அடுத்த காண்டிராக்டில் வாங்கி வைக்கலாம். எக்ஸ்பெய்ரி காரணமாக இனி வரும் நாட்களில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்.

காமெக்ஸ் தங்கம்

காமெக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று பலத்த ஏற்றத்திற்கு பிறகு இன்றும் மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. இது தற்போது அவுன்ஸுக்கு 13.80 டாலர்கள் குறைந்து, 1919.70 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும் இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி

காமெக்ஸ் வெள்ளி

தங்கம் விலையினை போலவே வெள்ளியின் விலையும் இன்று 1.43% குறைந்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 1.43% குறைந்து, 24.753 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம்

எம்சிஎக்ஸ் தங்கம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில், தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று சரிவிலேயே காணப்படுகின்றது.தற்போது 10 கிராமுக்கு (ஜூன் காண்டிராக்ட்) 217 ரூபாய் குறைந்து, 51,559 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. இதன் காரணமாக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி

எம்சிஎக்ஸ் வெள்ளி

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 644 ரூபாய் குறைந்து, 66,762 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம்

ஆபரண தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையிலும், ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. தற்போது சென்னையில் கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 4793 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து, 38,344 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம்

தூய தங்கம்

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 5229 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து, 41,832 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 52,290 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 80 பைசா குறைந்து, 71.30 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 713 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 71,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதுவே நீண்டகால நோக்கில் இன்று பொறுத்திருந்து வாங்கினால் லாபம் அதிகமானதாக கிடைக்கலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on march 31st,2022: goldman sachs sees gold prices hitting $2500 per ounce

gold price on march 31st,2022: goldman sachs sees gold prices hitting $2500 per ounce /தங்கம் விலை வீழ்ச்சியா.. எவ்வளவு குறைந்திருக்கு.. ஆபரணத் தங்கத்தின் நிலவரம் என்ன?

Story first published: Thursday, March 31, 2022, 12:15 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.