சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால் திண்டுக்கல், திருப்பூர், வேலூர் மற்றும் திருப்பத்தூரில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
