பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தில் பலவித நன்மைகள் அடங்கியுள்ளது.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. மேலும் வெங்காயம் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தினை வழங்குகின்றது.
அதுமட்டுமின்றி நமது பாட்டி வைத்திய குறிப்புக்களிலும் வெங்காயம் முக்கிய இடம் வகிக்கின்றது.
இதனை தினமும் எடுத்து கொள்வது நன்மையே.
அந்தவகையில் தினமும் வெங்காயம் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- வெங்காயம் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். சிவப்பு வெங்காயத்தை உட்கொள்வதால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைகிறது. மேலும், அவை உடலில் ஹைபோக்ளாய்சேமிக்கை உருவாக்குகின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு நிரப்பியாக செயல்படும்.
- வெங்காயத்தின் குளிர்ச்சித் தன்மையால், கோடையில் இதை உட்கொள்வதால் உடல் குளிர்ச்சியடைகிறது.
- கோடையில் வெப்பத்தால் தாக்கப்படுவதனால் கடுமையாக நோய்களை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.
அத்தகைய சூழ்நிலையில், வெங்காயத்தை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். - வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற அல்லியம் காய்கறிகளை உட்கொள்வதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை பெருமளவு குறைக்கலாம்.
- வெங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தை எதிர்த்துப் போராடவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகின்றன. இதன் காரணமாக இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன.