திருச்செந்தூர் கடற்கரையில் சுமார் 100 அடிக்கு கடல் உள்வாங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையோரம் அமைந்துள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கம். அதன்படி, அமாவாசை நாளில் சுமார் 100 அடிக்கு கடல் உள்வாங்கி, பாசி படிந்த பாறைகள் வெளியே தென்பட்டன. அலைகளும் சீற்றத்துடன் எழும்பும் நிலையில், அவற்றை பொருட்படுத்தாமல் குடும்பம் குடும்பமாக பக்தர்கள் கடலில் குளித்தனர். சிலர் பாறையின் இடுக்கில் உள்ள சங்கு, சிப்பி போன்ற வித்தியாசமான பொருட்களை எடுத்துச் சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM