ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கிராம மற்றும் வார்டு செயலகங்களை அகற்ற வேண்டும் என அந்த மாநில
உயர் நீதிமன்றம்
கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு இதுநாள்வரை நிறைவேற்றப்படவில்லை.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறியதாக, சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த எட்டு
ஐஏஎஸ் அதிகாரிகள்
மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்ட எட்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தலா இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதித்து ஆந்திர மாநில ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஏஎஸ் அதிகாரிகள், தீர்ப்பை நிறைவேற்ற தவறியதற்காக தண்டனை பெற்ற எட்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் கோர்ட்டில் பகிரங்க மன்னிப்பு கோரினர்.
இதனையடுத்து அவர்களுக்கான சிறைத் தண்டனையை திரும்ப பெற்ற நீதிமன்றம். அதிகாரிகள் எட்டு பேரும் ஒரு வருடத்துக்கு மாதத்தில் ஒரு நாள் சமூக நலத்துறை விடுதிக்கு சென்று சேவை செய்யும்படி உத்தரவிட்டது.
சேவை செய்யும் நாளில் மாணவர்களின் மதிய மற்றும் இரவு உணவு உள்ளிட்டவற்றுக்கான செலவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எட்டு பேரே ஏற்றுகொள்ள வேண்டும் எனறும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அடுத்த செய்திடூ வீலர், கார் விலை… சபையில் அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!