அடுத்த சில ஆண்டுகளில், தென் ஆப்ரிக்காவில் பென்குயின் இனம் முற்றிலுமாக அழிந்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அங்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பென்குயின்கள் இருந்த நிலையில் தற்போது 10,000 ஜோடிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
மீனவர்கள் அதிகளவில் மத்தி மற்றும் நெத்திலி மீன்களை பிடிப்பதால் பென்குயின்களுக்கு கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் கசிவுகள் மற்றும் பருவநிலை மாற்றத்தால் வாழ்விடம் இழந்து அவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
பாதுகாப்பற்ற இடங்களில் பென்குயின்கள் இடும் முட்டைகளை தன்னார்வலர்கள் மீட்டு, குஞ்சு பொறிக்கும் வரை அவற்றை பாதுகாத்து வருகின்றனர்.