மும்பையில் விமான பயணி ஒருவர், தான் தொலைத்த பையை கண்டுபிடிப்பதற்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வலைதளத்தையே ஹேக் செய்துள்ளார்.
நந்தகுமார் என்ற மென்பொறியாளர் பாட்னாவில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் மூலம் பயணித்துள்ளார். வீடு திரும்பிய பிறகே, அவரது உடைமை மாற்றி வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டும், எந்த பயனும் இல்லாததால், இண்டிகோ நிறுவனத்தின் வலைதளத்தை தனது நிரல் அறிவு மூலம் அவர் ஊடுருவி உள்ளார்.
பின்னர் குறிப்பிட்ட பயணியை தொடர்பு கொண்டு, இருவரும் தங்கள் உடைமைகளை மாற்றி கொண்டனர். இறுதியாக இண்டிகோவை ட்விட்டர் மூலம் தொடர்பு கொண்ட நந்தகுமார், நடந்தவற்றை கூறி, வலைத்தளத்தை மேம்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இண்டிகோவும் தனது சேவையை மேம்படுத்துவதாக உறுதி அளித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
