சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஐகோர்ட்டில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டுள்ளது. மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கூறினார். சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக் கோரி சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தார்.