டெல்லி: நீட் விலக்கு மசோதா தொடர்பாக பிரதமரிடம் அழுத்தமாக கோரிக்கை வைத்தேன் என டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சிக்குரியது மற்றும் மன நிறைவு உடையதாக இருந்தது. கோரிக்கைகளை பொறுமையாக கேட்ட பிரதமர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இலங்கை தமிழர்களுக்கு உணவு, மருந்து வழங்க அனுமதி கோரியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.