நேற்று தமிழ்நாட்டில் முதலீடு, இன்று UAE-யில் ஐபிஓ-வா..? அசத்தும் லூலூ குரூப் யூசுப் அலி..!

தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தில் 6 நிறுவனங்கள் உடனான ஒப்பந்தம் மூலம் சுமார் 6100 கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டது. இந்த 6 நிறுவனங்களில் அதிகப்படியாகச் சுமார் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்தது கேரள பில்லியனரான யூசப் அலி-யின் லூலூ குரூப் தான்.

7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..!

தமிழ்நாட்டில் மாபெரும் முதலீட்டுத் திட்டத்தை அறிவித்த கையோடு யூசப் அலி-யின் லூலூ குரூப் தற்போது ஐக்கிய அரபு அமிரீகத்தில் ஐபிஓ வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு லூலூ நிர்வாகம் என்ன பதில் அளித்துள்ளது தெரியுமா..?

லூலூ குரூப் இன்டர்நேஷனல்

லூலூ குரூப் இன்டர்நேஷனல்

மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய சூப்பர்மார்கெட் கடைகளின் முன்னணி பிராண்டான லூலூ குரூப் இன்டர்நேஷனல், அடுத்த ஆண்டுத் துவக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுப் பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஓ திட்டம்

ஐபிஓ திட்டம்

லூலூ குரூப் இன்டர்நேஷனல் நிறுவனம் வளைகுடா நாடுகளில் மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்த துவங்கியுள்ள நிலையில், இந்த ஐபிஓ மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கேரளாவில் ஏற்கனவே லூலூ மால் உள்ளது, கர்நாடகாவில் சமீபத்தில் துவங்கப்பட்டது, தமிழ்நாட்டில் அடுத்தச் சில வருடத்தில் திறக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

5 பில்லியன் டாலர்
 

5 பில்லியன் டாலர்

2020ல் 5 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்ற லூலூ குரூப் இன்டர்நேஷனல் வளைகுடா நாடுகளில் பலவற்றில் வர்த்தகம் செய்யும் காரணத்தால், ஐக்கிய அரபு நாடுகளில் மட்டும் அல்லாமல் இதர சில நாடுகளின் பங்குச்சந்தையிலும் ஐபிஓ வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மதிப்பீடு

மதிப்பீடு

லூலூ குரூப் இன்டர்நேஷனல் நிறுவனம் எந்தெந்த நாட்டில் ஐபிஓ வெளியிட போகிறது, என்ன மதிப்பீடு, ஐபிஓ முதலீட்டுத் தொகை என்ன போன்ற அனைத்தையும் ஆலோசனை செய்து கணக்கிடும் பணிகள் நடந்து வருவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்தது.

 யூசுப் அலி

யூசுப் அலி

இதேவேளையில் யூசுப் அலி லூலூ குரூப் இன்டர்நேஷனல் ஐபிஓ குறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், ஐபிஓ குறித்து ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. லூலூ குரூப் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதாக அறிவித்த பின்பு மக்கள் மத்தியில் இந்நிறுவனம் அதிகப்படியான கவனத்தை ஈர்த்துள்ளது.

கேரளா

கேரளா

கேரளாவை சேர்ந்த யூசுஃப் அலி 1990 களின் துவக்கத்தில் வளைகுடா பகுதிகளில் கச்சா எண்ணெய் வர்த்தகம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்த போது முதல் லூலூ கடையைத் திறந்தார்.

8 பில்லியன் டாலர்

8 பில்லியன் டாலர்

லூலூ குரூப் இன்டர்நேஷனல் நிறுவனம் வணிக வளாகங்கள் மற்றும் ஹஸ்ரிடாலிட்டி, ஷிப்பிங், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 8 பில்லியன் டாலர் உடன் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

22 நாடுகளில் வர்த்தகம்

22 நாடுகளில் வர்த்தகம்

இந்நிறுவனம் 57,000 க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டு வளைகுடா நாடுகள், ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா என மொத்தம் 22 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. இதற்கிடையில் லூலூ குரூப் கம்யூனிகேஷன்ஸ் பிரிவு தலைவர் வி.நந்தகுமார் கூறுகையில் சந்தையில் வரும் வதந்திகளுக்குப் பதில் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Is Lulu group’s Yusuff Ali Planning for Multiple IPO in UAE and other gulf countries

Is Lulu group’s Yusuff Ali Planning for Multiple IPO in UAE and other gulf countries நேத்துத் தமிழ்நாட்டில் முதலீடு, இன்று UAE-யில் ஐபிஓ-வா..? அசத்தும் லூலூ குரூப் யூசுப் அலி..!

Story first published: Thursday, March 31, 2022, 17:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.