பான் – ஆதார் எண் இணைக்க மார்ச் 2023 வரை காலக்கெடு நீட்டிப்பு.. ஆனா ஒரு கண்டிஷன்..!

பான் எண் மற்றும் ஆதார் எண் இணைக்க மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி எனப் பலமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது மத்திய நேரடி வரி வாரியம் மிகவும் முக்கியமான அறிவிப்பை சில கட்டுப்பாடுகள் உடன் வெளியிட்டுள்ளது.

மார்ச் 31, 2022ஆம் தேதிக்குள் பான் எண் மற்றும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்தக் காலக்கெடுவை மார்ச் 31, 2023 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆதார் பான்-ஐ ஆன்லைனில் இணைப்பது எப்படி..?

இதேபோல் மார்ச் 31, 2022க்குப் பின் ஆதார் உடன் பான் எண் இணைக்க 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

ஆதார் பான் இணைப்பை செக் செய்வது எப்படி..?

பான் எண்

பான் எண்

பான் எண் மிகவும் முக்கியமானது என்பதால் மத்திய அரசு மக்கள் ஐடிஆர் தாக்கல் செய்யவும், வருமான வரி ரீபண்ட் பெறவும் மற்றும் இதர வருமான வரி சார்ந்த பணிகளைச் செய்துகொள்ளவும் மார்ச் 31, 2023 வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

மார்ச் 31, 2023 வரை நீட்டிப்பு

மார்ச் 31, 2023 வரை நீட்டிப்பு

இந்நிலையில் மத்திய நேரடி வருமான வரி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் பான் எண் மற்றும் ஆதார் எண் இணைக்கக் கடைசி நாள் மார்ச் 31, 2022 என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மார்ச் 31, 2023 வரையில் 1000 ரூபாய் அபராதத்துடன் இணைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஆதார் பயோமெட்ரிக்
 

ஆதார் பயோமெட்ரிக்

இதேபோல் பான் மற்றும் ஆதார் பயோமெட்ரிக் உடன் இணைக்க 500 ரூபாய் அபராதத்துடன் ஜூன் 30, 2022 வரையில் இணைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதற்குப் பின் காலகட்டத்தில் இந்த அபராதம் 1000 ரூபாயாக நீட்டிக்கப்பட உள்ளது.

பான் எண் ரத்து

பான் எண் ரத்து

அனைத்திலும் முக்கியமானது மார்ச் 31, 2023க்குப் பின் ஆதார் உடன் இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் ரத்து செய்யப்படும் என மத்திய நேரடி வருமான வரி அமைப்பு. ஜனவரி 24, 2022 வெளியான தகவல் படி 43.24 லட்சம் பான்கார்டுகள் இணைக்கப்பட்டு உள்ளது, 131 ஆதார் கார்டு அளிக்கப்பட்டு உள்ளது.

வரி ஏய்ப்பை

வரி ஏய்ப்பை

பான் ஆதார் இணைப்பு மூலம் வருமான வரி ஏய்ப்பை சிறப்பான முறையில் கட்டுப்படுத்த முடியும் என மத்திய அரசு நம்பப்படும் காரணத்தால் இதைக் கட்டாயப்படுத்துகிறது. மேலும் பான் கார்டு ரத்து செய்யப்பட்டால் எவ்விதமான பணப் பரிமாற்றத்தையும், முதலீட்டையும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

PAN-Aadhaar Linking deadline extended by March 31, 2023 with 1000 rupee Late Fee; Inactive after March23

PAN-Aadhaar Linking deadline extended by March 31, 2023 with 1000 rupee Late Fee; Inactive after March23 பான் – ஆதார் எண் இணைக்க மார்ச் 2023 வரை நீட்டிப்பு.. ஆனா ஒரு கண்டிஷன்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.